Saturday 1 September 2012

குஜராத் : கர்ப்பினிப்பெண் "வயிற்றைக்கிழித்து" குழந்தையை எரித்தவருக்கு சாகும் வரை சிறை; பாஜக முன்னாள் அமைச்சருக்கு 28 ஆண்டுகள் சிறை!

AUG 31,  குஜராத்தில் 2002ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ.க. மற்றும் சங்கபரிவாரங்கள் நிகழ்த்திய கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நரோடா பாட்டியா என்ற இடத்தில் மட்டும் 97 முஸ்லிம்கள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். குறிப்பாக "கவ்சர் பானு" என்ற "நிறைமாத கர்பினியின் வயிற்றைக்கிழித்து" குழந்தையை திரிசூலத்தால் குத்தி, பிறகு அந்த சிசுவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் இந்த இடத்தில் தான் நடந்தது. கவ்சர் பானு வின் கணவர் "பைரோஜின் கண் எதிரில்" இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது. நிறைமாத கர்ப்பிணி மற்றும் அதன் வயிற்றிலிருந்த குழந்தை கொலை செய்யப்பட்டதை கண்ட, அவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளாக எவரோடும் பேசாமல் பேயறைந்த நிலையில் காணப்பட்டார். (படத்தில் : தீர்ப்பு வெளியான போது பைரோஸ்  கதறி அழுத காட்சி)  இந்த கலவரத்தில்  தொடர்புடைய பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சர் உட்பட 32 பேரை ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அறிவித்திருந்தது.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்த தீர்ப்பை இன்று அறிவித்தது. அதில், நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக முன்னாள் அமைச்சர் "மாயா கோட்னானி"க்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின் தலைவன்  "பாபு பஜ்ரங்கி"க்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மற்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.